For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எனது மகன் சாவதற்கு முன்பு குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்- பேரறிவாளன் தந்தை

Google Oneindia Tamil News

Perarivalan
சென்னை: எனது மகன் பேரறிவாளன் உயிரை விடுவதற்கு முன்பே, நான் எனது குடும்பத்துடன் வேலூர் சிறை முன்பு தற்கொலை செய்து கொள்வேன். பொம்மை பேட்டரியை வாங்கிக் கொடுத்ததற்காக தூக்கா?. என்ன அநியாயம் இது?. முதல்வர் ஜெயலலிதாதான் எனது மகனைக் காபபாற்றித் தர வேண்டும் என்று பேரறிவாளனின் தந்தை குமுறல் வெளியிட்டுள்ளார்.

சாந்தன், முருகன் ஆகியோரைத் தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. வேலூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில், சாதாரண பொம்மைகளில் பயன்படுத்தப்படும் பேட்டரியை வாங்கிக் கொடுத்ததற்கா எனது மகனுக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளனர். இது என்ன அநியாயம். செய்யாத குற்றத்துக்காக எனது மகன் 21 வருடமாக சிறையில் வாடி வருகிறான்.

எனது மகன் உயிரை விடுவதற்கு முன்பே, நானும், எனது குடும்பத்தினரும், வேலூர் சிறை முன்பு தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவோம்.

எனது மகனை முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள்தான் காப்பாற்றி என்னிடம் தர வேண்டும். அவரால்தான் இது முடியும். அவரைத்தான் நாங்கள் நம்பியுள்ளோம் என்றார் கண்ணீர் மல்க குயில்தாசன்.

கலெக்டரை முற்றுகையிட்டு போராட்டம்

கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரை சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு போராட்டம் நடத்த சட்ட மாணவர்கள் வந்தனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து வெளியேயே நிறுத்தினர். ஆனால் மாணவர்கள் திமுதிமுவென உள்ளே புகுந்தனர்.

அங்கு விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கலெக்டர் என்னவென்று விசாரிக்க வெளியே வந்தார். இதைப் பார்த்த மாணவர்கள் கலெக்டரை சிறை பிடித்து முற்றுகையிட்டு ஆவேசமாக கோஷமிட்டனர். பின்னர் போலீஸார் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினர்.

சென்னையில் ரயில் மறியல்

இதேபோல சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தாம்பரம் செல்லும் மின்சார ரயிலை மறித்து சட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ரயில் முன்பு தலைவைத்துப் படுத்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் போராட்டம்

இதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

English summary
Perarivalan's father Kuyil Dasan has said we will commit suicide with all family members before my son dead. He also urged CM Jayalalitha to save his son.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X