தி.மு.க. தூத்துக்குடி மேயர் வேட்பாளருக்கு எதிராக எம்.பியின் ஆதரவாளர் மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி தி.மு.க.மேயர் வேட்பாளருக்கு எதிராக, அக்கட்சி எம்.பி.யின் ஆதரவாளர் சுயேட்சையாக மனுதாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி பரிந்துரையின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி தி.மு.க. மேயர் வேட்பாளராக பொன்.இனிதாவை தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. அவர் விரைவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், தி.மு.க.கவுன்சிலராக இருந்த ரகுநாதன் மனைவி ஹேமா, மேயர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மாநகராட்சி தேர்தல் அதிகாரி தினேஷ் ஆலிவர் பொன்ராஜிடம் மனுதாக்கல் செய்தார்.
இவர் தூத்துக்குடி ஜெயதுரை எம்.பி.யின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications