For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு கேரள அமைச்சருக்கு அச்சுதானந்தன் நோட்டீஸ்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஆபாசமாக பேசிய கேரள அமைச்சர் கணேஷ்குமாரிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கேரள வனத்துறை அமைச்சரான கணேஷ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் பத்தானபுரத்தில் நடந்த ஒரு பொதக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தனை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கணேஷ்குமாரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். சட்டப்பேரவையிலும் இந்த பிரச்சனை வெடித்தது. இதையடுத்து அமைச்சர் கணேஷ்குமார் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அச்சுதானந்தன் கணேஷ்குமாரை விடுவதாக இல்லை.

அவருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். அவதூறாகப் பேசிய கணேஷ்குமார் அமைச்சர் பதவியை ராஜினமா செய்துவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு அவருக்கு அச்சுதானந்தன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

English summary
Kerala oppositon leader Achuthanandan has sent lawyer notice to minister Ganeshkumar asking him to resign his post, appologise for defaming him or to give Rs.1 crore as compensation. Minister Ganeshkumar talked ill of Achuthanandan in a public meeting in Kerala.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X