For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலிபான் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் பிடிபட்டார்

By Chakra
Google Oneindia Tamil News

கோஸ்ட்: தலிபான் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளரான ஜபியுல்லா முஜாகித் பிடிபட்டுள்ளார்.

அவரை ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படையினர் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள பத்கிகா மாகாணத்தின் சர் ஹவ்ஸா மாவட்டத்தில் கூட்டுப் படையினர் நடத்திய சோதனையில் இவர் பிடிபட்டார்.

தலிபான் இயக்கத்தின் இரு அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களில் முஜாகிதும் ஒருவர் ஆவார். கிழக்கு மற்றும் வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதிகளுக்கான தலிபான் செய்தித் தொடர்பாளராக இவர் இருந்தார்.

விரைவில் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பழங்குடித் தலைவர்களின் மாநாட்டை (loya jirga) கூட்டவுள்ளார் அந் நாட்டு அதிபர் ஹமீத் கர்சாய். இந்த மாநாட்டுக்கு வருவோருக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படையினர் உருவாக்கிய ரகசிய திட்டம் தலிபான்கள் கையில் சிக்கியது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அடங்கிய ரகசிய திட்ட அறிக்கையை ஜபியுல்லா முஜாகித் மூலமாக தலிபான்கள் வெளியில் கசிய விட்டனர். மேலும் தங்களது இணையத்தளத்திலும் அப்லோட் செய்தனர்.

இதன்மூலம் பழங்குடித் தலைவர்களின் மாநாடு பாதுகாப்பாக நடக்குமா என்பதே சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. இதனால் இதில் பங்கேற்க பல பழங்குடித் தலைவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் தான் கூட்டுப் படையினரிடம் ஜபியுல்லா சிக்கியுள்ளார்.

English summary
An Afghan government official said Mr. Mujahid was among suspects detained during joint military operations in the remote Sar Hawza district of Paktika Province in the southeast of the country along the Pakistan border. A second government official in Paktika confirmed the account. He was responsible for e-mailing copies of a secret Afghan and coalition security plan for protecting the upcoming loya jirga, a grand gathering of Afghans convened by President Hamid Karzai. Officials denied that the security plan, which was also posted on the Taliban Web site, was genuine. But if it was a fake, it was a very elaborate one: many details in it, such as private phone numbers of intelligence officers, made it appear legitimate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X