For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.85 குறைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Petrol Bunk
டெல்லி: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.85 குறைத்துள்ளன.

கடந்த 33 மாதங்களில் இப்போது தான் முதன்முதலாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையைப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இதனடிப்படையில், கடந்த வாரம் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 1.80 ரூபாய் உயர்த்தப்பட்டது.

இப்போது ரூ. 1.85 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.

இது 2010ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின் நிகழும், முதல் விலை குறைப்பாகும். பெட்ரோல் மீதான விலை நிர்வாகக் கட்டுப்பாட்டு முறையை, மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல பெட்ரோல் விலை நிர்ணயம் செய்துகொள்கின்றன.

நவம்பர் 22ம் தேதி நாடளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால் பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனையை இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் எழுப்ப முடிவு செய்திருந்தனர். அவர்களின் எதிர்ப்பை சமாளிக்கும் விதமாகவே மத்திய அரசு இவ்வாறு நாடகம் ஆடுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Petrol is to be cheaper by about Rs 1.85 a litre from Tuesday midnight as state oil firms have decided to cut its rates for the first time in last 33 months
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X