For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமைச் செயலக ஊழல் விசாரணைக் கமிஷன்- நீதிபதி தங்கராஜ் திடீரல் விலகல்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளில் நடந்த ஊழல்குறித்து விசாரிக்க ஜெயலலிதா அரசு அமைத்த விசாரணைக் கமிஷனின் தலைவரான நீதிபதி தங்கராஜ் திடீரென அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு விட்டார்.

கடந்த திமுக ஆட்சியின்போது பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை கட்டப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதை மூடி விட்டது. மேலும் இதன் கட்டுமானப் பணியில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக கூறிய அரசு இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்தது. இந்தக் கமிஷன் 3 மாதத்திற்குள் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கிடையே தங்கராஜ் நியமனத்தை எதிர்த்து விஜயலட்சுமி என்ற திமுக வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் தங்கராஜ் தற்போது தனது பதவியிலிருந்து விலகி விட்டார். இந்தத் தகவலை அரசு வக்கீல் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தங்கராஜின் விலகலுக்கான காரணம் தெரியில்லை.

English summary
Justice Thangaraj has resigned from New secretariat probe panel. This was informed to the Madras HC by the Govt pleader today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X