For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவுக்கு சிமென்ட் தருவதை எதிர்த்து இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் முற்றுகைப் போராட்டம்

Google Oneindia Tamil News

India Cements, Sankar Nagar plant
நெல்லை: கேரளாவுக்கு சிமென்ட் அனுப்புவதை எதிர்த்து நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டும், கேரள லாரிகளை மறித்து நிறுத்தியும் போராட்டம் நடந்துள்ளது.

தாழையூத்து அருகே உள்ள சங்கர் நகரில் இந்தியா சிமென்ட் ஆலை உள்ளது. இங்கிருந்து கேரளாவுக்கு பெருமளவில் சிமென்ட் அனுப்பப்படுகிறது. இனிமேல் இங்கிருந்து சிமென்ட் அனுப்பக் கூடாது என்று நெல்லையில் நடந்த மக்கள் சக்தி மன்றம் சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் போட்டுள்ளனர்.

இதை வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர். இதனால் இந்தியா சிமென்ட் நிறுவனத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் மக்கள் சக்தி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர் நகருக்குத் திரண்டு வந்து போராட்டத்தில் குதித்தனர்.

அப்போது சிமென்ட் மூடைகளை ஏற்றிக்கொண்டு வந்த கேரள மாநில லாரிகளை தடுத்து மறுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Makkal Sakthi mandram stopped cement ladden Kerala lorries in Shankar Nagar today. The urged the India cements not to send cement to the state, which is demanding the decommissioning of Mullaiperiyaru dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X