For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுபிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி: ஒயின், ஸ்காட்ச் விஸ்கி விலை குறைகிறது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Red wine
டெல்லி: புத்தாண்டையொட்டி உற்சாகமான அறிவிப்பு ஒன்றினை மத்திய அரசு வெளியிட திட்டமிட்டிருக்கிறது.

வெளிநாட்டு இறக்குமதி ஒயின், விஸ்கி மீதான வரியை 3ல் 2 பங்கு குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் ப்ரெஞ்ச் ஒயின் ஸ்காட்ச் விஸ்கி ஆகியவற்றின் விலை 3ல் 2 பங்கு குறையும். இறக்குமதியாகும் பெரிய காருக்கான வரியும் குறைகிறது.

இந்தியாவின் ஏற்றுமதி தொழில் தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையை மாற்றி ஐரோப்பிய நாடுகளை கவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், விஸ்கி ஆகியவற்றுக்கு இறக்குமதி வரியை 50 சதவீதமாக குறைப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் தற்போது அவற்றிர்க்கு 150 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

இறக்குமதி வரி குறையும்

வெளிநாட்டு பெரிய கார்களுக்கான வரியும் அதிகளவில் குறையலாம் என தெரிகிறது. இதையடுத்து, பிரெஞ்சு ஒயின் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி ஆகியவற்றின் விலை இந்தியாவில் 3ல் 2 பங்கு குறையும். இறக்குமதியாகும் வெளிநாட்டு பெரிய கார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதன்மூலம், இந்திய ஜவுளி, ஆடைகள் மற்றும் விளை பொருட்களை அதிகளவில் இந்தியா ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய நாடுகளில் சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சில நாட்களில் வெளியாகலாம் என்று தெரிகிறது.

English summary
There is something to cheer in the New Year. The government appears set to slash import duty on wines and spirits imported from Europe to under 50% from 150% at present, in a move that will make French wine and Scotch whisky more attractive to tipplers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X