For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய அணை கட்டத் தேவையில்லை என்றதால் நீக்கப்பட்ட கேரள போராட்டக் குழுத் தலைவர்

Google Oneindia Tamil News

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணையில் எப்படியெல்லாம் கேரளத் தரப்பு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது என்பதற்கு அவ்வப்போது அவர்களது தரப்பிலிருந்தே உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முன்பு அட்வகேட் ஜெனரல் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மக்களுக்குப் பாதிப்பு வராது என்று கூறினார். அதேபோல முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டத் தேவையில்லை என்று கூறி அதனால் தனது பொறுப்பை இழந்துள்ளார் முல்லைப பெரியாறு அணை எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவர்.

முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம், புதிய அணை கட்டுவோம் என்ற முழக்கத்துடன் போராடுவதர்காக முல்லைப் பெரியாறு சமர சமிதி என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இடுக்கி மாவட்டத்தில் போராடி வருகிறார்கள். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் சி.பி.ராய். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த அமைப்புக்குள் தற்போது குழப்பம் ஏற்பட்டு விட்டது. அணையை உடைக்கத் தேவையில்லை என்ற கருத்தை சிபி. ராய் முன்வைத்துள்ளார். இது மற்றவர்களுக்கு கடும் கடுப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து கூட்டம் போட்டு ராயை நீக்கி விட்டனர்.

சமீபத்தில் ராய் கருத்துத் தெரிவிக்கையில், அணையில் அழுத்தம் அதிகரிப்பதுதானே தற்போது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. எனவே தற்போதைய அணையில் ஏற்கனவே உள்ள 104 அடி சுரங்கப் பள்ளத்திற்குப் பதிலாக 50 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டினால் போதும். அப்படிச் செய்வதன் மூலம் அணையின் அழுத்தத்தைக் குறைக்கலாம். அணைக்கும் ஆபத்து வராது, புதிய அணைக்கும் அவசியம் ஏற்படாது என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இது போராட்டக் குழுவைச் சேர்ந்த மற்றவர்களுக்குப் பிடிக்கவி்ல்லை. அது எப்படி ராய் இப்படிச் சொல்லலாம் என்று கோபமடைந்த அவர்கள் கூட்டத்தைக்கூட்டி ராயை பதவியிலிருந்து நீக்கி விட்டனர். புதிய தலைவராக ஜாய் நிரப்பல் என்ற பாதிரியாரை நியமித்துள்ளனர்.

இதுகுறித்து ராய் கூறுகையில், நான் ஒரு யோசனையைத்தான் சொன்னேன். அதுகுறித்து சமிதி விவாதிக்கவே இல்லை என்றார்.

English summary
Keala's Anti Mullaiperiyar agitation council's chairman C P Roy has been sacked from his comment against building a new dam. Fr Joy Nirappal has been nominated as the new chairman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X