For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமோகமாக அரியணையில் அமர்ந்த 'அம்மா'!

Google Oneindia Tamil News

எம்.ஜி.ஆருக்குக் கூட கிடைத்திராத அமோகமான மக்கள் ஆதரவுடன் ஜெயலலிதா 3வது முறையாக தமிழக அரியணையில் ஏறிய ஆண்டு இது.

வரலாறு காணாத வெற்றியுடன் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் 3வது முறையாக ஜெயலலிதா தலைய���ல் கடந்த மே மாதம் ஆட்சியைப் பிடித்தது.

திமுகவுக்கு எதிரான புகார்களை, குற்றச்சாட்டுக்களை, குறைகளை அழகாக மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்த்தது, தேமுதிகவை லாவகமாக கூட்டணிக்குள் இழுத்தது, கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்தது (ஏகப்பட்ட அலங்கோலங்கள், குழப்பங்கள் இருந்தாலும்) என ஜெயலலிதாவின் பக்கம் ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகள் சேர்ந்ததால் அமோக வெற்றியைப் பெற்றது அதிம���க கூட்டணி.

திமுக குடும்பத்தினரின் அராஜகம், அட்டகாசம், அதிகார துஷ்பிரயோகங்கள், திரைத் துறையினரை முற்றிலும் கைப்பாவையாக மாற்றி ஆட்டிப் படைத்தது, பல முன்னணி நடிகர்களுக்கே மிரட்டல் விடுத்தது, மின் தடை, விலைவாசி உயர்வு என திமுக ஆட்சியின் பக்கம் இருந்த மைனஸ் பாயிண்டுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றியைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் ஜெயலலிதா.

161 தொகுதிகளில் போட��டியிட்ட அதிமுக 147 இடங்களை அள்ளியது. இதன் மூலம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா. மே 15ம் தேதி அவரும், 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

பெரும் வெற்றியுடன் ஆட்சியைப் பிடித்தாலும் சசிகலா ரூபத்தில் உள்ளுக்குள்ளேயே கிளர்ந்தெழுந்த மாபெரும் எதிரியை சமாளிக்க முடியாமல் ஜெயலலிதா நிலைகுலைய நேரிட்டது. இருப்பினும் சுதாரித்துக் கொண்டு சசிகலாவையும் இந்த ஆண்டின் இறுதியில் வெளியேற்றியுள்ள ஜெயலலிதா, இன்னும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்பது மக்களின் கூற்றாக உள்ளது. 2012ம் ஆண்டை 'அம்மா ஆண்டாக' ஜெயலலிதா மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
ADMK supremo Jayalalitha returned to power for the 3rd time this May. She pulled the voters behind her and with the help of DMDK's votes, she snatched the power from DMK and came to rule for the 3rd time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X