For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிறந்த தேதி பிரச்சனை-மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ராணுவ தளபதி வழக்கு

By Chakra
Google Oneindia Tamil News

V K Singh
டெல்லி: பிறந்த தேதி பிரச்சனையில் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி வி.கே.சிங், மத்திய அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். ராணுவத் தளபதி ஒருவர் தனது பதவிக் காலத்தில், மத்திய அரசை நீதிமன்றத்துக்கு இழுத்திருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

ராணுவ தலைமைத் தளபதியாக பதவி வகித்து வருபவர், வி.கே.சிங் என்ற விஜயகுமார் சிங்கின் மெட்ரிகுலேஷன் சான்றிதழில், அவரது பிறந்த தேதி 1951ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ராணுவப் பணிக்காக அவர் மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி நடத்திய ராணுவ அகாடமி தேர்வு எழுதியபோது வி.கே.சிங்கின் பிறந்த தேதி மே 10, 1950ம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேதியின்படி கணக்கிட்டால் வருகிற மே 31ம் தேதி அன்று வி.கே.சிங் ஓய்வு பெற வேண்டும்.

ஆனால், தனது பிறந்த தேதி 51ம் ஆண்டு தான் என்று கூறி வருகிறார் சிங்.

இந்தப் பிரச்சனையில், கடந்த சில மாதங்களாக அவருக்கும், மத்திய அரசுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. தனது மெட்ரிகுலேஷன் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரி, ராணுவ அமைச்சகத்துக்கு வி.கே.சிங் இரு முறை சட்டபூர்வமாக மனு அனுப்பியிருந்தார்.

ஆனால், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, சமீபத்தில் வி.கே.சிங்கின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தலைமை ராணுவ தளபதி வி.கே.சிங் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் யு.யு.லலித் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

வி.கே.சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், 13 லட்சம் ராணுவ வீரர்களுக்கு தலைவர் என்ற முறையில் இந்த பிரச்சனை எனது நற்பெயர் மற்றும் நேர்மையுடன் தொடர்புடையது. என்னுடைய 36 ஆண்டு பணிக்காலம் மற்றும் பல்வேறு பதவி உயர்வுகளுக்கு பிறகு எனது பிறந்த தேதியை மாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டது ஏன்?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்த ஜெனரல் வி.கே.சிங், 2010ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி தலைமை ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.

தவி உயர்வு பெற்றவர். பணியில் இருக்கும் தலைமை ராணுவ தளபதி ஒருவர் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Army Chief General VK Singh has taken his battle with the government over his age to the Supreme Court. This is the first time that any service chief has fought the government in court. Sources in the government say that while all government employees have the right to seek legal help, certain positions merit absolute trust and should not be tarnished with an adversarial relationship. The court has so far not admitted the General Singh's petition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X