For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்

Google Oneindia Tamil News

Koodankulam Nuclear Plant
திருநெல்வேலி: கூடங்குளம் அணு உலை தொடர்பான பொதூமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பத்திரிகையாளர்களுக்கான விளக்க கருத்தரங்கு நாளை நடைபெற உள்ளது.

கூடங்குளத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும் கருத்தரங்கில் விளக்கம் அளிப்பதற்காக மும்பை விஞ்ஞானிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கருத்தரங்கு மூலம் பத்திரிகைகளில் கூடங்குளம் அணு உலை தொடர்பான அச்சம் நீங்கும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.

கருத்தரங்கு ஏன்?

கூடங்குளத்தில் ரூ.15 ஆயிரம் கோடியில் இந்திய-ரஷ்யா கூட்டு தொழில்நுட்ப அடிப்படையில் அணு மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலை பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. 2வது அணு உலைகள் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கடந்த டிசம்பர் மாதமே முதலாவது அணு உலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க அணுமின் நிலைய கழகமும் இந்திய அரசும் முடிவு செய்தன.

ஆனால் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக அணு மின் நிலையத்தை திறக்க கூடாது என்று தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது.

English summary
Symposium to be held tomorrow on nuclear reactor safety at kudankulam for journalists to create awareness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X