For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தற்போதைய தி.மு.க.வின் நிஜமுகம்தான் பொதுக்குழு மோதல்: கருணாநிதி குமுறல்

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்போட்டு அவரை பேசவிடாமல் தடுப்பது போன்ற குணங்கள்தான் தி.மு.க.வின் இப்போதைய முகம் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி குமுறிக் கொட்டியுள்ளார்.

பொதுக்குழுவில் கருணாநிதி பேசியதாவது:

வீரபாண்டி ஆறுமுகம் பேச்சில் எந்தத் தவறும் இல்லாத சூழ்நிலையில், அவர், தி.மு.க.,வில் உள்ள தொண்டர்களுக்கு விடுத்த வேண்டுகோளை தவறாகத் திரித்து, அவர் மீது மோதுவது போல, ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்பதைப் போல காட்டி, ஒரு பிளவை கட்சியில் ஏற்படுத்த, சில குண்டர்கள் முயற்சித்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

நீங்கள், ஸ்டாலினுக்கு உதவி புரிந்ததாக அர்த்தமில்லை. ஸ்டாலின் வளர்ந்துவரும் காலத்தில், இந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்கும் முன், அவர் மீது ஒரு களங்கத்தைக் கற்பிக்கிற முறையில், இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டதே என்று தான் கவலைப்படுகிறேன்.

ஓட்டுப்பிச்சை எடுத்து தலைவனாகமாட்டேன்

பேரும், புகழும், மதிப்புகளும், சான்றிதழும் வாங்கியவன் நான். அண்ணா, பெரியாராலேயே பாராட்டப்பட்டவன். பேராசிரியரின் நன்மதிப்பைப் பெற்றவன்' என்றெல்லாம் சொல்லி, நான் தி.மு.க., தலைவனாக நீடிக்க வேண்டுமென்று உங்களிடம் ஓட்டு கேட்க விரும்பவில்லை. ஓட்டுப் பிச்சையெடுத்து, நான் தலைவனாக நீடிக்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால், அடுத்த பொதுக்குழுவை, தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் என்று வைத்து, அதில் ஓட்டளிக்கச் செய்து, அதை எண்ணிப் பார்த்து, யார், யார் இதற்கு என்று அறுதியிட்டு, முடிவு செய்யலாம்.

வீரபாண்டியையே தடுமாறச் செய்வதா?

உங்களுடைய அருமையான, ஆதங்கமற்ற, அன்பான, மேடையை நோக்கிப் பாய்கிற அளவுக்கு, தம்பி வீரபாண்டி ஆறுமுகம் எத்தனையோ கூட்டங்களைச் சமாளிப்பார். அவரையே திக்குமுக்காடச் செய்கிற அளவுக்கு, நீங்கள் நடத்திய இந்த நிகழ்ச்சி, வரவேற்கத்தக்கது. ஏனென்றால், அப்போது தான், நமக்கு விளம்பரம் கிடைக்கும். அந்த விளம்பரத்தை காசில்லாமல் தெரிவித்த உங்களுக்கு, என்னுடைய நன்றி. எனக்கும், பொதுக்குழுவைப் பற்றிய, இப்போதுள்ள தி.மு.க.,வைப் பற்றிய, ஒரு காட்சியைக் காட்டியதற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

English summary
The succession issue dominated a crucial general council meeting of the DMK in the city on Friday, with supporters of Union minister M K Alagiri and party treasurer M K Stalin bringing up the issue and provoking party chief M Karunanidhi to rise to the challenge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X