For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

29ம் தேதி பெங்களூரில் ராபின் சர்மா

By Chakra
Google Oneindia Tamil News

ஆன்லைன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள தொழில் அதிபர்களுக்கு கடன் வழங்கும் ரங் தே அமைப்பின் 4வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி வரும் 29ம் தேதி பெங்களூர் தாஜ் விவான்டா ஹோட்டலில் லீடர்ஷிப் குரு ராபின் சர்மா உரை நிகழ்த்தவிருக்கிறார்.

கிராமப்புறங்களில் குறைந்த முதலீட்டில் தொழில் செய்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் கடன் வழங்கி வரும் அமைப்பு ரங் தே. இது கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் இந்த அமைப்பு 13 மாநிலங்களைச் சேர்ந்த 12,500 சிறு தொழிலதிபர்களுக்கு ரூ.6.4 கோடி வரை கடன் கொடுத்துள்ளது.

இந்நிலையில் 4வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவும், மைக்ரோகிரெடிட் என்னும் சிறுகடன் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரங் தே அமைப்பு வரும் 29ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர், யஷ்வந்தபூரில் உள்ள தாஜ் விவான்டா ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் லீடர்ஷிப் குரு ராபின் சர்மா கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். காலை 9 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும். அதன் பிறகு மதிய உணவு வழங்கப்படும்.

ராபின் சர்மாவின் லீட் வித் அவுட் எ டைட்டில் என்ற புத்தகம் யாரும் தலைவராகலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. அவர் இதுவரை 11 புத்தகங்கள் எழுதியுள்ளார். சர்மா லீடர்ஷிப் இன்டர்நேஷனல் ஐஎன்சி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் உலகின் தலைசிறந்த நிறுவனங்களுக்கு எல்லாம் தொழில் ரீதியான ஆலோசனை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை https://bitly.com/y3Atgq என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து மேலும் தகவல் அறிய அதிதி 9591527628 , [email protected] மற்றும் ஸ்மிதா 9686114608, [email protected] ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

English summary
Rang De, India’s first online micro-lending platform has arranged for an event on leadeship on february 29 at Taj Vivanta, Yeshwantpur Bangalore from 9am to 12 pm to commemorate its completion of 4th year. Leadership guru Robin Sharma is addressing the gathering. For more details contact Aditi: 9591527628 , aditi@rangde.org, Smita: 9686114608, smita@rangde.org
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X