For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கரன்கோவில் அருகே கலவரம்: 2 எஸ்.ஐ.க்கள் படுகாயம்-போலீஸ் துப்பாக்கி சூடு

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் படுகாயம் அடைந்தனர். போலீசார் கண்ணீர்ப் புகைகுண்டு, துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரக்காரர்களை கலைந்து போகச் செய்தனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜர் நகர், காந்தி நகர், கழுகுமலை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள காளியம்மன், உச்சிமாகாளியம்மன் மற்றும் அம்மன் கோவில்களில் தை மாத கொடை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி மாலை 6 மணிக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த மக்கள் தீர்த்த நீர் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கழுகுமலை சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். அங்குள்ள பெரியபள்ளிவாசல் அருகே ஊர்வலம் வந்தபோது பள்ளிவாசலை நோக்கி செருப்பு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தொழுகை முடிந்து வெளியே வந்தவர்கள் இதனை பார்த்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் பள்ளிவாசல் முன்பு திரண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் அதே சமயம் காந்தி நகர் காளியம்மன் கோவில், உச்சிமாகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்களைச் சேர்ந்த பக்தர்கள் தீர்த்த நீர் எடுத்துக் கொண்டு வந்தனர். அப்போது அங்கு வந்த சிலர் அவர்கள் எடுத்து வந்த பூஜைக்குரிய தாம்பூலங்களை எட்டி உதைத்தனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த கடைகள், லாரி, ஆட்டோக்கள அடித்து நொருக்கப்பட்டன. இதில் சங்கரன்கோவில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சுதா, சொக்கலிங்கம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் கடைகள், கார்கள் கொளுத்தப்பட்டன.

இருதரப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இருபுறமும் திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கலவரம் தீவிரமடைந்தது. சொற்ப அளவிலேயே இருந்த போலீசாரால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் சங்கரன்கோவில் தேர் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கலவர தகவல் கிடைத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உள்ளே செல்ல முடியாததால் அவர்களும் அங்கேயே நின்றனர். இரவு 10 மணிக்கு டிஐஜி வரதராஜு, நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இரு தரப்பினரும் தாக்குதலை நிறுத்தும்படி ஒலி பெருக்கியில் தெரிவித்தும் கலவரக்காரர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்படியும் கலவரம் கட்டுக்குள் வராததால் போலீசார் கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசினர். இதையடுத்து கலவரக்காரர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். இதனால் சங்கரன்கோவிலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Riot broke out near Sankarankovil during a temple festival. Police used tear gas to disperse the rioters. 2 SIs are badly injured in this incident. Security has been tightened as tension prevails there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X