For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலர் தினத்தை புறக்கணிக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: இளைஞர்கள் காதலர் தினத்தை புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது,

காதலர் தினம் எனும் பெயரில் கலாச்சார சீரழிவில் சிக்கும் இளைஞர்களை காக்க கடந்த ஆண்டு கடற்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மகளிர் அணி பர்தா அணிந்த 10 பெண்களை அணுகி தஃவா செய்தது. அப்போது அந்த பெண்களில் 9 பேர் முஸ்லிம் அல்லாத ஆண்களோடு காதல் கொண்டு கடற்கரை வந்திருப்பது தெரிய வந்தது.

சமுதாய பெண்களின் இந்த அவல நிலையை போக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பிப்ரவரி மாத தொடக்கம் முதலே தனது பிரச்சாரத்தை துவங்கிவிட்டது. போஸ்டர், பிட் நோட்டீஸ், தெருமுனை பிரச்சாரம், பெண்கள் பயான், ஜும்மா பயான் போன்ற வழிகளில் கலாச்சார சீரழிவை எடுத்து சொல்வதோடு, இந்த ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி அன்று கடற்கரையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது.

தனியொரு ஜமாஅத்தால் இதை தடுத்து விட முடியாது என்பதால், அனைத்து சமுதாய இயக்கங்களும், மகல்லா ஜமாஅத்துகளும் களமிறங்கி இந்த தீமைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Indian Tauheed Jamaath has asked the youngsters to boycott Valentines day celebration as it is against our culture. It is planning to go to the beach and campaign against the V-day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X