For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரேலை குறிவைத்து ஈரான் வெடிகுண்டு தாக்குதல் நடத்துகிறது: ஐ.நா.விடம் புகார்

By Mathi
Google Oneindia Tamil News

Israeli Embassy Car Blast
டெல் அவிவ் (இஸ்ரேல்): இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமது தூதகரங்களை குறிவைத்து தொடர் தாக்குதலை நடத்தி வரும் ஈரானை கண்டிக்குமாறு ஐ.நா.விடம் இஸ்ரேல் புகார் கொடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கான ஐ.நா.சபையின் நிரந்தர பிரதிநிதி ரோன் புரோசர், ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு எழுதியுள்ள் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் எங்கள் தூதரக அதிகாரி வாகனத்தில் நடந்த குண்டு வெடிப்புபோல், லெபனான், தாய்லாந்து, பல்கேரியா, ஜியார்ஜியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகளிலும் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஈரானும், அதன் ஆதரவு பெற்ற ஹெஜ்புல்லா தீவிரவாத இயக்கமும்தான் காரணம்.

சம்பவ இடங்களிலிருந்து ஈரானியர்களின் கைரேகை ஆதாரமாக கிடைத்து உள்ளன. ஈரானின் நடவடிக்கைகளால் பல நாடுகளுக்கு, அந்த நாட்டு அப்பாவி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

டெல்லி, திபிலிசி, பாங்காக் நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புக்காக ஈரானை ஐ.நா. பாதுகாப்பு சபை உடனடியாக கண்டிக்க வேண்டும்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Israel has lodged a complaint before the UN chief over the alleged terror campaign launched by Iran and its 'proxy' Hezbollah against Israeli targets in recent weeks, including in India and Thailand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X