For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரான் பிரச்சனைக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது: நிருபமா ராவ்

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஈரான் பிரச்சனைக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

பாஸ்டன் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் நிருபமா பேசியதாவது:

சர்வதேச அளவிலான பிரச்சனைகளுக்கு போர்தான் தீர்வு எனப் பேசுவதி சரியானது அல்ல. மேற்கு ஆசியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனான உறவு பாதிக்காத வகையில் ஈரானுடனான இந்தியாவின் உறவு இருக்கும்.

அணுசக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கு ஈரானுக்கு முழு உரிமை இருப்பதை இந்தியா அங்கீகரிக்கிறது. ஆனால் ஈரானின் அணுசக்தி விவகாரம் சர்வதேச சமூகத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இதனால் அணுசக்தி விவகாரத்தில் சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஈரான் உதவ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் அமைதியான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலை. இது ஒரு சர்வதேச விவகாரம். இதற்கு போர் தீர்வாகாது.

தெற்காசியாவைப் பொறுத்தவரையில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மிக முக்கியமானவை. ஆகையால் இந்த நாடுகளில் அரசியல் நிலைத்தன்மையும் அபிவிருத்தியும் அவசியம் என கருதுகிறோம். பாகிஸ்தானுடன் இயல்பான நீண்ட கால நல்லுறவையே இந்தியா விரும்புகிறது. சர்வதேச அளவில் அமைதியை முன்னெடுத்துச் செல்வதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து பாடும் என்றார் அவர்.

English summary
Hoping for a peaceful resolution of the Iranian crisis, the top Indian diplomat in the US has cautioned the international community that talk of war would not help a solution and would only erode global cohesion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X