For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் போராட்டத்திற்கு அமெரிக்க என்.ஜி.ஓ.க்களே காரணம்: மன்மோகன் சிங்

By Siva
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த சில என்.ஜி.ஓ.க்கள் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க இடையூறு செய்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை செயல்படவிடாமல் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் ஓயாது என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை போராட்டக்குழு தலைவர் உதயகுமார் மறுத்தார். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சில என்.ஜி.ஓ.க்கள் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க இடையூறு செய்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் அமெரிக்க பத்திரிக்கையான சயின்ஸுக்கு கூறியதாவது,

அமெரிக்காவைச் சேர்ந்த சில என்.ஜி.ஓ.க்கள் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க இடையூறாக உள்ளன. இந்தியாவில் மின் உற்பத்தி அதிகரிப்பதை அவை விரும்பவில்லை. சிந்தித்து செய்ல்படும் மக்கள் அனைவரும் அணு சக்திக்கு ஆதரவாக உள்ளனர். விஞ்ஞானிகளை சும்மா உட்கார வைக்க முடியாது. அவர்கள் பல மாதங்களாக வேலையின்றி இருக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஸ்கான்டினேவியன் நாடுகளைச் சேர்ந்த என்.ஜி.ஓ.க்களுக்கு இந்தியாவின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றார்.

English summary
PM Manmohan Singh blames US based NGOs as the reason for the problems in Kudankulam against the nuclear power plant. He has told the American journal "Science" that "the atomic energy programme has got into difficulties because these NGOs, mostly I think based in the US, don't appreciate the need for our country to increase the energy supply."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X