For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாத மையம் -பஞ்சாப் அமைச்சரவை நிராகரிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சண்டிகர்: மத்திய அரசின் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் யோசனையை பஞ்சாப் மாநில அமைச்சரவை நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக மாநில் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

மத்திய அரசின் தேசிய தீவிரவாத தடுப்பு மையமானது மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுகிறது.

இதனை மாநில அமைச்சரவை நிராகரிக்கிறது. கூட்டாட்சிஅரசுக்கு எதிரான இந்த மையமானது மாநில அரசுகளின் உரிமைகளை கபளீகரம்செய்துகொள்கிறது என்றார் அவர்.

தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு சிரோமணி அகாலிதளம் தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் மிகக் கடுமையாக தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை எதிர்த்து வருகின்றனர்.

தமிழ்நாடு, ஒரிசா, மேற்குவங்க மாநிலமுதல்வர்கள் ஏற்கெனவே பிரதமர் மன்மோகனுக்கு இது தொடர்பாக கடிதங்களையும் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநில அமைச்சரவை மத்திய அரசின் முடிவை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Punjab cabinet Friday rejected the proposal of the central government to set up the National Counter Terrorism Centre (NCTC), saying it encroaches upon the rights of state governments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X