For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் முன்னணி விண்வெளி விஞ்ஞானி ராஜினாமா

By Mathi
Google Oneindia Tamil News

Roddam Narasimha
டெல்லி: இந்திய விண்வெளிக் கமிஷனின் முன்னணி விஞ்ஞானியான ரோதம் நரசிம்ஹா பதவி விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இஸ்ரோவின் சர்ச்சைக்குரிய ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட 4 பேர் அரசுப் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த அணுகுமுறையை விஞ்ஞானிகள் விமர்சித்து வருகின்றனர்.

இந் நிலையில் விஞ்ஞானிகளை அரசு நடத்தும் விதத்துக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையிலேயே நரசிம்ஹா பதவி விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பதவி விலகியுள்ள ரோதம் நரசிம்ஹா, இந்தியாவின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிபுணராவார். பிரதமர் தலைமையிலான விண்வெளிக் கழகத்தின் உறுப்பினராக உள்ள அவர் தனது அந்தப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளித்துறையில் பணியாற்றிய ரோதம் நரசிம்ஹா, சந்திராயன் -1 விணகலம், பி.எஸ்.எல்.வி., ஏ.எஸ்.எல்.வி. செயற்கைக்கோள்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக செலுத்தியதில் முக்கியப் பங்கும் வகித்தவர்.

English summary
Top Indian space scientist and member of Space Commission- Prof Roddam Narasimha has decided to quit from his job. According to sources, he has written a letter to Prime Minister Dr Manmohan Singh and asked him to release him from the services with immediate effects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X