For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவுக்கு வரும் அவுட் சோர்சிங் வாய்ப்புகள் அடுத்த 8-10 ஆண்டுகளில் குறைந்துவிடும்?

By Mathi
Google Oneindia Tamil News

Outsourcing
டெல்லி: இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கக் கூடிய அவுட் சோர்சிங் வேலை வாய்ப்புகள் 2014-ம் ஆண்டிலிருந்து குறையக் கூடும் என்று ஹாக்கெட் குரூப் எனப்படும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவுக்குக் கொடுத்திருக்கும் அவுட் சோர்சிங் வேலை வாய்ப்புகள் பல இந்த ஆண்டின் இறுதியில் முடிவடைய உள்ளன. அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் பெரும்பாலான ஆப்ஷோரிங் பணிகள் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து விடைபெறக் கூடும்.

இதனால் இந்திய நிறுவனங்கள் மாற்று வேலைவாய்ப்புகளைத் தேடுவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் 40 சதவீதமாக உள்ள அவுட் சோர்சிங்பணிகள் 2013-ம் ஆண்டில் 38 ஆகக் குறைந்ஹ்டு அதன் பின்னர் படிப்படையாகக் குறைந்துவிடும். வெளிநாட்டு வங்கிகள், ஆயுள்காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக இந்திய பிபிஓ துறைக்கு 14 பில்லியன் டாலர் முதல் 100 பில்லியன் டாலர் வரையில் வருமானம் கிடைத்து வருகிறது.

2016-ம் ஆண்டில் அவுட் சோர்சிங் பணிகள் மிகவும் கணிசமாகக் குறைந்துவிடக் கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதை நிராகரிக்கும் இந்திய நிறுவனங்கள், தற்போது உலகளவில் ஆப்ஷோரிங் துறையில் இந்தியாவின் பங்களிப்பு 6 விழுக்காடாக இருக்கிறது. நிச்சயம் 2014ம் ஆண்டில் 12 விழுக்காடாக அதிகரிக்கும் என்று வாதிடுகின்றனர்.

English summary
Offshoring of jobs to India will begin to decline starting 2014, and will reach the end of its lifecycle in eight years, according to US-based strategic advisory and research firm The Hackett Group released at the Nasscom Global In-House Centers ( GIC) Conclave being held here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X