For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: நினைத்ததை முடித்தார் ஜெயலலிதா

Google Oneindia Tamil News

Jayalalitha
நெல்லை: சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக 8வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சங்கரன்கோவில் தொகுதி அதிமுக கோட்டை என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா நினைத்தது போன்று தான் நடந்துள்ளது.

சங்கரன்கோவில் தொகுயில் இதற்கு முன்பு வெற்றி வெற்ற வேட்பாளர்கள் அதிகபட்சமாக 70,297 வாக்குகள் தான் பெற்றனர். ஆனால் தற்போது வெற்றி பெற்றுள்ள அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 94,977 வாக்குகள் பெற்றுள்ளார். சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் கருப்பசாமி 11,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இடைத்தேர்தலில் போட்டியிட்ட முத்துசெல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது கடந்த தேர்தலை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.

சட்டசபை தேர்தலின்போது சங்கரன்கோவில் தொகுதியில் 61,902 வாக்குகள் பெற்ற திமுகவுக்கு இடைத்தேர்தலில் வெறும் 26,220 வாக்குகள் தான் கிடைத்தன.1996ல் மதிமுக இந்த தொகுதியில் ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டபோது 30,893 வாக்குகள் பெற்றது. 2001ல் அக்கட்சிக்கு 20,610 வாக்குகள் கிடைத்தன. தற்போது மதிமுகவுக்கு 20,678 வாக்ககுள் கிடைத்துள்ளன. தேமுதிகவுக்கு 12,144 வாக்குகள் கிடைத்துள்ளன. சட்டசபை தேர்தலின்போது அதி்முக கூட்டணியில் இருந்ததால் தேமுதிக சங்கரன்கோவிலில் போட்டியிடவில்லை. ஆனால் 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக வேட்பாளர் 5,531 வாக்குகள் பெற்றார். பாஜக கட்சிக்கு வெறும் 1,633 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

தேமுதிக இதற்கு முன்பு பெற்றதை விட 6,613 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. தனித்து போட்டியிட்டு அதி்முகவுக்கு சவாலாக இருப்போம் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறி இருந்தார். ஆனால் தேமுதிக 4வது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. இதற்கு முன்பு பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகள் பெற்றுள்ளோம் என்று அவர்கள் சொன்னாலும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் சட்டசபை தேர்தலில் தேமுதிக வெற்றி பெற முடிந்தது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியது உண்மையாகி இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் சொந்த கிராமமான புளியம்பட்டியில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் அதிமுகவுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. அங்கு அதிமுக 10,984 வாக்குகளும், திமுக 450ம், தேமுதிக 218ம், ம்திமுக 83 வாக்குகளையும் பெற்றுள்ளன.

வைகோவின் சொந்த ஊரான களிங்கபட்டியில் மதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. அங்கு அமைக்கப்பட்டிருந்த 3 வாக்குச்சாவடிகளில் மதிமுக 1,158 வாக்குகளைப் பெற்றது. அதி்முகவுக்கு 761ம், திமுகவுக்கு 110ம், தேமுதிகவுக்கு 42 வாக்குகளும் கிடைத்துள்ளன.

English summary
Sankarankovil people have proved again that they are ardent supporters of ADMK by making the ruling party to win there for the 8th consecutive term. ADMK candidate Muthuselvi has created history by becoming the first woman MLA of Sankarankovil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X