தமிழருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்: ராஜபக்சே

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கைத் தமிழர் நலனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியும் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை எக்ஸ்போ 2012 கண்காட்சியை தொடங்கி வைத்து ராஜபக்சே பேசியதாவது:

பெரும் தியாகங்கள் மூலம் பெறப்பட்டிருக்கும் சமாதானத்திற்கு மத்தியில் இலங்கை உள்ளது. நாம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

நல்லிணக்கத்திற்கூடாக நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு மேலதிகமாக ஒரு மைல் நடப்பதற்கு எனது அரசாங்கம் தயாராகவுள்ளது. இது எமது மக்களுக்கான எமது அர்ப்பணிப்பாகும். நாம் என்ன செய்ய வேண்டுமென வேறு யாரும் கூறக்கூடாது என்றார் அவர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மறைமுகமாக கடும் தொனியில் ராஜபக்சே விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
While claiming that the government is committed to walk an extra mile to establish permanent peace through reconciliation, Sri Lankan President Mahinda Rajapaksa today said that no one has to tell Sri Lanka what to do.
Please Wait while comments are loading...