For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐபிஎல் துவக்க விழாவில் அருவறுக்கத்தக்க ஆபாச நடனம்: பாஜக குற்றச்சாட்டு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் தமிழக எம்.பி.க்களையும் சேர்க்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வரும் 16ம் தேதி எதிர்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை செல்வது மகிழ்ச்சி தான். ஆனால் அந்த குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த எம்.பி.க்கள் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்துக்கள் மாறுபட்டிருந்தாலும் நாடாளுமன்றக் குழுவில் அனைத்துக் கட்சிகளும் இடம்பெற வேண்டும்.

கடந்த முறை திருமாவளவன் இலங்கை சென்றபோது அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் கருத்துக்கு பதில் தெரிவிக்காதது அவமானம். ஆனால் அதை கருத்தில் கொண்டு தற்போது அவரை அழைக்காததை ஏற்க முடியாது.

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ராணுவ புரட்சி என்று செய்தி வந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு தகுதியற்றதாக இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. நம் நாட்டில் ராணுவ புரட்சி நடக்காது என்று நம்புகிறோம். அப்படி இருக்கையில் இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளதால் அரசு கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

தங்க நகைகள் மீது கூடுதல் சுங்க வரி விதிப்பதால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும். பிறகு ஏழைகளால் பொட்டுத் தங்கம் கூட வாங்க முடியாமல் போகும். எனவே, தங்கத்தின் மீதான வரியை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.

கோவில் விழாக்களில் ரெக்கார்டு டான்ஸ் நடத்த நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. கிராமங்கள் மட்டும்ல்லாமல் எந்த விழாக்களிலும் கலாச்சாரத்தை சீரழிக்கும் நடனங்களை அனுமதிக்கக் கூடாது.

கிரிக்கெட் போட்டி அவசியம், அதை அனைவரும் ரசித்துப் பார்க்கிறோம். அதை வைத்து இளைஞர்களை திசை திருப்பும் வகையில் ஐபிஎல் துவக்க விழாவில் அருவறுக்கத்தக்க ஆபாச நடனம் நடத்தப்பட்டுள்ளது. அந்த நடனத்தை நடத்தியவரகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமர் பாலத்தை புனித பாலமாக அறிவிக்க வேண்டும். அந்த பாலத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வரும் 28, 29 ஆகிய தேதிகளில் பாஜக மாநில மாநாடு மதுரையில் நடக்கிறது. இதில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, நிதின் கட்காரி, சுஷ்மா ஸ்வராஜ், குஜராத் முதல்வர் மோடி, கர்நாடகா முதல்வர் சதானந்த கௌடா உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அனைத்து தமிழர்களையும் அழைக்க 2 தமிழ்த்தாய் சிலைகள் இன்று முதல் வரும் 25ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. தமிழக அரசின் தொலை நோக்கு திட்டம் கட்டாயம் தேவை. திட்டத்தோடு மட்டுமில்லாமல் அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

English summary
Senior BJP leader cum lok sabha opposition leader Sushma Swaraj leads a delegation of MPs to Sri Lanka on April 16. BJP state president wants centre to include CPI, MDMK and VCK representatives in that team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X