ஆப்கன் தாக்குதல் எதிரொலி: ராணுவம் எச்சரிக்கையாக இருக்க ஏ.கே.ஆண்டனி அறிவுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

AK Antony
டெல்லி: ஆப்கானிஸ்தானில் தொடர்தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் இந்திய ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி அறிவுறுத்தியுள்ளார்.

ராணுவ தளபதிகளுடனான 3 நாள் மாநாட்டில் கலந்து கொண்ட ஆண்டனி இதனைத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

தலிபான்கள் தாக்குதல்கள் நடைபெற்றாலும்கூட அந்நாட்டுக்கு இந்தியாவின் உதவி தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் ஆண்டனி கூறியுள்ளார்.

ராணுவ தலைமை தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இடையே பல்வேறு பஞ்சாயத்துகள் ஏற்பட்டிருந்த நிலையில் இம்மாநாடு தற்போது நடைபெறுகிறது.

மேலும் இந்திய ராணுவம் பலவீனமாக இருப்பதாக வெளியான செய்திகள் பற்றியும் அந்தோணி கூட்டியுள்ள இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ள்தாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+