ரயில் பயணிகளுக்கு உதவ வரும் சிம்ரன்!

Subscribe to Oneindia Tamil

Train
டெல்லி: ரயில் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பது போன்ற தகவல்களைப் பெற www.trainenquiry.com-ல் ரொம்பவே மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கீங்களா? கவலையே விடுங்க.... கொஞ்ச நாளில் ரொம்ப எளிமையாக கூடுதல் தகவலோடு உருமாறப் போகுது இந்த தளம்...

சர்ச்சிங்

தற்போது இந்த இணையதளத்தில் ரயில் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற தகவலை நீங்கள் பெற வேண்டுமெனில் கண்டிப்பாக ரயில் எண் அல்லது ரயிலின் பெயர் தெரிந்திருக்க வேண்டும்...

ஆனால் புதியதாக மாற்றிவடிவமைக்கப்படும் தளத்தில் ரயிலின் எண்ணைத் தேடுவது, ரயில் பெயரை தேடுவது என்ற வேலையெல்லாம் எதுவும் கிடையாது.. ஜஸ்ட் 2 செகண்ட்ஸ்தான்!

நீங்களோ அல்லது உங்கள் நண்பரோ எந்த ஊருக்குப் போகிறாரோ அந்த ஊரின் பெயரை டைப் செய்தால் கூட தகவல் கிடைத்துவிடும்.. ஊரின் ஸ்டேஷன் கோடு தெரிந்துகொள்ளவும் தேடனும்னு நினைக்கிறீங்களா! அதுவும் இல்லை...

உங்க நண்பர் திண்டுக்கல் போறார்னா திண்டுக்கல் என்று ஆங்கிலத்தில் டைப் செய்தாலே போதும்.. கிடுகிடுவென ஒரு லிஸ்ட் வந்து விழும்.. அதுல இப்ப திண்டுக்கல் போய்க்கொண்டிருக்கும் ரயில்களின் விவரம் சட்டென கிடைக்கும்.... அதுல நீங்க நினைக்கிற ரயிலை கிளிக் செய்தால் இப்ப அது எங்க போய்க்கிட்டு இருக்குனு கண்டுபிடிச்சரலாம்..

பயணிகளுக்கு எப்படி ஈசியாக தகவல்களை விரைவாக கொடுக்கறதுன்னு பல நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைகளைக் கேட்டு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது...

புதிய தளம் எப்படி உருவாகிறது என்று பார்க்க ஆசையா? இங்கே கிளிக் செய்யுங்கள் www.trainenquiry.com/searchtrain.aspx

www.simran.in

இதேபோல் www.simran.in மூலமாக ரயிலின் வேகம், தாமதம், செல்லுமிடம், கோச் எந்த இடத்தில் இருக்கிறது, போன்றவற்றை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

ஜிபிஎஸ் சேட்டிலைட் உதவியுடன் தற்போது மொத்தம் 36 ரயில்கள் பற்றி மட்டும்தான் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடியும்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில்களைப் பற்றியும் முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+