For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு சக்தி விவகாரம்: மே 23ல் ஈரானுடன் பாக்தாத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: அணுசக்தி விவகாரம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 2-ம் கட்டப் பேச்சுவார்த்தை மே 23-ந் தேதி நடைபெற உள்ளது.

அணுசக்தியை ஈரான் ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

அணு ஆயுதம் தயாரிக்கும் ஈரான் மீது போர் தொடுத்தாக வேண்டும் என்று கூறிவருவதுடன் அதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளிலும் இஸ்ரேல் தீவிரம் காட்டிவருகிறது.

இஸ்ரேல் போர் தொடுத்தால் ஈரானின் பதிலடியும் பயங்கரமாக இருக்கும் என்பதால் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. துருக்கியை மத்தியஸ்தராகக் கொண்டு இப்பேச்சுவார்த்தையை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து துருக்கியின் இஸ்தான்புல்லில் நேற்று முன்தினம் சுமார் 7 மணி நேரம் ஈரான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரசியா,சீனா, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய நடப்பு பேச்சுவார்த்தை, உணர்வுப்பூர்வமான பயனுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான ஒன்று என என்று சீனப் பிரதிநிதிக்குழுவின் தலைவரும் வெளியுறவு அமைச்சரின் உதவியாளருமான மா சாவ் சு தெரிவித்தார்.

அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மே மாதம் 23-ந் தேதி ஈராக் தலைநகரான பாக்தாத்தில் நடைபெறுகிறது.

English summary
The latest negotiations between six- world powers and Iran on its nuclear program mark a positive development in international efforts to ease tension over the long-standing issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X