மதிய உணவுத் திட்டம்: வரலாற்றையே மாற்ற அதிமுக முயற்சி- ஈ.வி.கே.எஸ். புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குடியாத்தம்: மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த காமராஜர் குறித்து சட்டசபையில் அமைச்சர்கள் தவறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது வரலாற்றை மாற்றும் முயற்சி. உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு இதை சட்டசபை குறிப்புகளில் இருந்து நீக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான் என்று சட்டசபையில் அமைச்சர்களும் அதிமுக எம்எல்ஏக்களும் பேசினர்.

இந் நிலையில் குடியாத்தத்தில் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த காமராஜர் குறித்து தமிழக சட்டசபையில் தவறான கருத்துக்களை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இது வரலாற்றை மாற்றும் முயற்சி. உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு இதை சட்டசபை குறிப்புகளில் இருந்து நீக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்களின் நிலை உயர வேண்டும் என்பதற்காக மட்டுமே காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். காமராஜர் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார். இந்த சேவையை பாராட்டி சென்னையில் காமராஜர் சிலையை அப்போதைய பிரதமர் நேரு திறந்து வைத்தார்.

அத்தகைய புகழுக்கு, தியாகத்துக்கு இழுக்கு ஏற்பட காரங்கிரஸ் தொண்டர்கள் விடமாட்டார்கள்.

இலங்கைக்கு சென்ற எம்.பிக்கள் குழு தமிழர்களுக்கு தனி குடியுரிமை வேண்டும் என்பதை தெளிவாக கூறியுள்ளனர். 50,000 வீடுகள் கட்டுவது போன்ற திட்டங்களை உடடினயாக செயல்படுத்த வேண்டும்.

சட்டீஸ்கரில் கலெக்டர் கடத்தப்பட்டது துரதிஷ்டவசமானது. அவரை மீட்க உள்துறை அமைச்சகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டின் காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் மின் பற்றாகுறையோ 3,500 மெகாவாட். ஆனால் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் 2,000 மெகாவாட் மட்டுமே என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...