ஐரோப்பாவைத் தாக்கும் திட்டத்தை 'சீன்' படத்துக்குள் ஒளித்து அனுப்பிய அல் கொய்தா!
வாஷிங்டன்: ஐரோப்பாவில் தனது தாக்குதல் திட்டத்தை ஆபாசப் படம் ஒன்றுக்குள் மறைத்து அல்கொய்தா அனுப்பிய விவரம் வெளியாகியுள்ளது.
மும்பையில் 2008ம் ஆண்டு நடத்திய தீவிரவாதத் தாக்குதலைப் போல ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்ற அல் கொய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட விவரங்களை ஒரு ஆபாசப் படத்தில், எம்பெட் செய்து, அதை மெமரி டிஸ்க்கில் வைத்து அனுப்பியுள்ளனர். இது ஜெர்மன், ஆங்கிலம், அரபி ஆகிய மொழிகளில் பிடிஎப் பார்மட்டில் அனுப்பப்பட்டுள்ளது.
இதை அமெரிக்க உளவுப் பிரிவினர் கண்டறிந்து சதித் திட்டத்தை முறியடித்துள்ளனர்.இதுகுறித்து முதன் முதலில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டை ஜெய்ட் என்ற செய்தித்தாள்தான் வெளியிட்டது. பெர்லினில் கடந்த ஆண்டு கைதான அல்கொய்தா நபர் மூலம்தான் இது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட நபரான 22 வயது ஆஸ்திரிய நபரான மக்சூத் லோடின் மூலம் இத்தகவலை அதிகாரிகள் பெற்றுள்ளனர். இந்த மெமரி டிஸ்க்கை லோடினின் ஜட்டியிலிருந்து அதிகாரிகள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மெமரி டிஸ்க்கைப் போட்டுப் பார்த்தபோது அது கிக் ஆஸ் என்ற பெயரிலான ஒரு ஆபாசப் படம் என்று தெரிய வந்தது. அதேபோல செக்ஸி டாஞ்சா என்ற பெயரிலும் ஒரு ஆபாசப் படம் இருந்தது. ஆனால் அந்த மெமரி டிஸ்க்கை ஆராய்ந்தபோதுதான் அதில் ஐரோப்பிய நாடுகளில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த விவரங்கள் ஒளிந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அதிர்ந்தனர்.
அந்த மெமரி டிஸ்க்கில் மொத்தம் 100 அல் கொய்தா ஆவணங்கள் பொதிந்திருந்தன. இதுகுறித்து மேலும் விரிவான விசாரணை நடந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications