சச்சின் எம்.பியாவதை எதிர்த்த மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் செய்துள்ள செயற்கரிய சாதனைகளைப் பாராட்டி மத்திய அரசு அவரை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கியுள்ளது. இது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது என்று கூறி ராம்கோபால் சிங் சிசோடியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் புகழ்பெற்றவர்களை மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். நீதிபதி தீபக் வர்மா தலைமையிலான பெஞ்ச் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்து தள்ளுபடி செய்தது.
மேலும் இது குறித்து அவர் உரிய உயர் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
16ல் பதவியேற்கும் சச்சின்:
சச்சின் டெண்டுல்கர் வரும் 16ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்கிறார்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ரேகா ஆகியோர் கடந்த மாதம் 26ம் தேதி ராஜ்யசபா உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்டனர். மத்திய அரசின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் பிரதீபா பாடீல் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து வரும் 15ம் தேதி ரேகாவும், 16ம் தேதி சச்சினும் ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவியேற்கவிருக்கின்றனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications