For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய தொலைத் தொடர்புக் கொள்கை: ரோமிங் கட்டண முறை முடிவுக்கு வருகிறது

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் செல்போன் ரோமிங் கட்டண முறையை ரத்து செய்யவும் செல்போன் எண்களை மாற்றாமல் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் போர்ட்டபிலிட்டி முறையை நீட்டிக்கவும் வகை செய்யும் புதிய தொலைத் தொடர்புக் கொள் குறித்து மத்திய அமைச்சரவை இன்று விவாதிக்க உள்ளது.

நாட்டின் தற்போதைய தொலைத் தொடர்பு கொள்கையானது 13 ஆண்டுகளுக்கு முந்தையது. தற்போதைய ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு முறையும் பழையதுதான். இதனால் ஒரே மாதிரியான லைசென்ஸ் சேவை கொண்டுவரப்பட உள்ளது.

தற்போது தொலைத் தொடர்புத் துறையானது பல்வேறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு வட்டத்திலிருந்து இன்னொரு வட்டத்துக்கு செல்லும்போது ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி இந்த மாதிரி எதுவும் இல்லாமல் இந்தியா முழுவதுமே பேசுவதற்கு ஒரே கட்டணத்தை வசூலிக்கக் கூடிய முறை கொண்டுவரப்பட உள்ளது.

இதேபோல் தொலைபேசி எண்களை மாற்றிக்கொள்ளாமல் சேவை நிறுவனங்களை மட்டும் மாற்றிக் கொள்ளும் போர்ட்டபிலிட்டி முறையை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தற்போது வழங்கப்படும் பிராண்ட்பேட் இணைப்புக்கான வேகத்தை மினிமம் 2 mbps ஆக இருக்குமாறும் மாற்றப்பட்ட உள்ளது.

மத்திய அரசின் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை தங்களுக்கு சாதகமானதாக இருக்குமா? இல்லையா என்பதை தொலைத் தொடர்பு நிறுவனங்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

English summary
The government is set to pave the way for an end to mobile roaming within the country and usher in a country-wide number portability scheme along with faster broadband speed proposed in the New Telecom Policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X