For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை உயர்வால் அத்தனை மக்களும் பாதிப்படைவார்கள்: பாஜக

Google Oneindia Tamil News

Pon Radhakrishnan
சென்னை: பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் உள்பட அத்தனை தரப்பு மக்களும் பெரும் பாதிப்படைவார்கள். எனவே மத்திய அரசு இந்த விலை ஏற்றத்தை உடனே வாபஸ் பெறவேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க. சார்பில் ஒரு வார போராட்டம் நடத்தும் என்று மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்து 3 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கடந்த 3 ஆண்டுகளில், அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தியதும், பெட்ரோல் விலையை 10 முறைக்கு மேலாக உயர்த்தியதும்தான் மத்திய அரசின் சாதனை ஆகும்.

தற்போது அவர்கள் ஒரே தடவையாக 7 ரூபாய் 50 காசு உயர்த்தியிருப்பது, இதுவரை எந்த அரசும் செய்யத் துணியாத மக்கள் விரோத செயல் ஆகும். இந்த பெட்ரோல் விலை உயர்வு சாதாரண மக்களை, ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிப்புக்கு ஆளாக்கும்.

ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை கார் ஓட்டுவோர் பாதிக்கப்படுவதோடு, அதை பயன்படுத்தும் நடுத்தர மக்களும் மிகப்பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

மத்திய அரசு இந்த விலை ஏற்றத்தை உடனே வாபஸ் பெறவேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க. சார்பில் ஒரு வார போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அவர்.

English summary
Middle class people will be affected by the steep petrol price hike, says BJP. Its TN unit president Pon Radhakrishnan has urged the cente to revoke the hike immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X