டிரான்ஸ்பர் வரைக்கும் போன மதுரை ஆட்சியர்,எஸ்பியின் ஈகோ யுத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
sagayam asra gargh
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் மற்றும் எஸ்.பி. அஸ்ரா கார்க் ஆகியோருக்கு இடையே தொடங்கிய ஈகோ யுத்தம்தான் இப்பொழுது இடமாற்றம் வரைக்கும் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் சகாயம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை உளவுத்துறை மூலமாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு அஸ்ரா கார்க் கொண்டு சென்றதாகவும் இதைத் தொடர்ந்தே சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டு கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை ஆதீனம் விவகாரத்தில், மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மதுரை ஆதீன மீட்பு குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம் மனு அளித்தனர். அதன் மீது விசாரணை நடத்த சகாயம் உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும், நித்தியானந்தாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற போது, அது குறித்து காவல்துறை தலைமையிடம் அஸ்ரா கார்க்கும், சகாயமும் விவாதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் இருவரும் இணைந்து செயல்படாமல் ஒருவருக்கொருவர் இஸ்டத்துக்கு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் மதுரையைச் சுற்றியுள்ள அமைச்சர்கள் சிலர் சொல்வதை சகாயமும், மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க்கும் கேட்பதே கிடையாது. அவர்களை வைத்துக் கொண்டு செயல்பட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயராக முடியாது என அதிமுக தலைமையிடம் அமைச்சர் ஒருவர் புகார் மனு வாசித்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இதனால்தான் இருவருக்கும் டிரான்ஸ்பர் கிடைச்சதாகவும் சொல்லப்படுகிறது..

நேர்மையாக தாம் உண்டு வேலை உண்டு என்றிருந்தாலும் பஞ்சாயத்து.. அய்யா ..சாமி என்று ஆமாம் சாமி போட்டாலும் பஞ்சாயத்து.. !

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Madurai Collector Sagayam and SP Asra Garg were transferred for their ego war.
Please Wait while comments are loading...