For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சதாம் உசேனின் செயலாளர் ஹமித்தை தூக்கில் போட்டது ஈராக்

By Mathi
Google Oneindia Tamil News

பாக்தாத்: சதாம் உசேனின் நம்பிக்கைக்குரிய முதன்மைச் செயலாளராக இருந்த அபேத் ஹமித் ஹமவுட் நேற்று தூக்கிலிட்டப்பட்டதாக ஈராக்கிய நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவினால் தேடப்பட்டோர் பட்டியலில் 4-ம் இடத்தில் இருந்தவர் அபேத் ஹமித். 2003-ம் ஆண்டு சதாம் உசேனை அமெரிக்கா தூக்கிலிடப்பட்ட பின்னர் அவரது நம்பிக்கைக்குரிய செயலார் ஹமித் தலைமறைகிவிட்டார். நீண்டகால தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் அபேத் ஹமித் பிடிபட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடத்தபப்ட்டது.

சதாம் உசேனின் ஆட்சியில் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அபேத் ஹமித்துக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணை முடிவில் உறுதியும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈராக் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

இந்த தண்டனை பாக்தாத்தின் சிறை வளாகத்தில் உள்ள தூக்குத் தண்டனை நிறைவேற்றும் இடத்தில் ஹமித் தூக்கிலிடப்பட்டார். இதனை ஈராக் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சதாம் உசேனின் உறவினரான கெமிக்கல் அலி கடந்த 2010-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அதேபோல் சதாம் ஆட்சிக்காலத்து அமைச்சரான தாரிக் அஜிஸுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னமும் அது நிறைவேற்றப்படவில்லை.

English summary
Saddam Hussein's trusted personal secretary, once No. 4 on the US most-wanted list in Iraq, was executed by hanging on Thursday, the Iraqi Justice Ministry said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X