For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்மநாபசுவாமி கோவிலின் அடியி்ல் சுரங்கப் பாதையா?-ஆய்வு பணி தொடக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

Padmanabhaswamy Temple
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற பத்மநாபசாமி கோயிலின் அடியில் சுரங்கம் உள்ளதா என்பது குறித்து நிலவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது 2 அறைகளில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி உச்சநீதிமன்றம் நியமித்த மதிப்பீட்டு குழுவால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பத்மநாபசாமி கோவிலின் அடியில் பல சுரங்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் போர்க்காலங்களில் மன்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தப்பி செல்வதற்காகவும், ஆபத்து காலங்களில் பொக்கிஷங்களை பாதுகாப்பாக வேறு இடத்துக்குகொண்டு செல்லவும் இந்த சுரங்க பாதைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரகசிய அறையி்ல் பல லட்சம் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதால் பத்மநாபசாமி கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு அடியில் சுரங்கப்பாதை இருந்தால் அந்த வழியாக கொள்ளையர்கள் நுழையலாம் என போலீஸ் கருதுகிறது. இதனால் சுரங்கப்பாதை உள்ளதா என கண்டுபிடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து கேரள நிலவியல் துறை பொறியாளர்கள் சுரங்கப்பாதை இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வை தொடங்கியுள்ளனர்.

English summary
The geological authorities try to find more mysterious in Thiruvananthapuram Padmanabhaswamy Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X