For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நித்தியானந்தா ஆசிரமத்தை கையகப்படுத்துவோம்-கர்நாடக அரசு

Google Oneindia Tamil News

Nithyananda Dhynapeetam Ashram
பெங்களூர்: நித்தியானந்தா ஆசிரமத்தில் விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகினறன. அவரது ஆசிரமத்த அரேச ஏற்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே ஆசிரமத்தை அரசு தனது பொறுப்பில் ஏற்றுக கொள்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக சட்ட அமைச்சர் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் குமார் தார்வாடில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஆட்சேபனைக்குரிய, விரும்பத்தகாத செயல்கள் நித்தியானந்தா ஆசிரமத்தில் நடந்து வருகிறது. இது வருத்தம் தருகிறது. எனவே ஆசிரமத்தை அரசே கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலிக்கும்.

இதுதொடர்பான முடிவை முதல்வர் சதானந்த கெளடாவும், உள்துறை அமைச்சர் அசோக்கும் மேற்கொள்வார்கள் என்றார்.

ஆசிரமத்தைக் கைப்பற்றி அங்கு அரசு சார்பில் நிர்வாகியை நியமிக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

ஆசிரமத்திற்கு அமைச்சர் விசிட்

இதற்கிடையே, கர்நாடக மாநில வனத்துறை அமைச்சரும் ராமநகர மாவட்ட பொறுப்பு அமைச்சருமான யோகேஷ்வர் பிடதி ஆசிரமத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். பி்ன்னர் ஆசிரம விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீராம ரெட்டி, எஸ்.பி. அனுபம் அகர்வால் ஆகியோருக்கு அவர உத்தரவி்ட்டார்.

English summary
With pressure mounting from public in Karnataka to act against the controversial self-styled godman Nithyananda, the State government is now considering to take over the Nithyananda Dhynapeetam Ashram near Bidadi on the outskirts of Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X