For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி ஏமாற்றம் தருகிறது: பிரணாப் முகர்ஜி கவலை

By Mathi
Google Oneindia Tamil News

Pranab Mukherjee
டெல்லி: இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி (ஐஐபி) ஏப்ரல் மாதத்தில் 0.1% அளவிற்கு இருப்பது கவலை அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்திருப்பது குறித்து இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரணாப் பதிலளித்து கூறியதாவது:

ஏப்ரல் மாத உற்பத்தி வளர்ச்சி திருப்திகரமானதாக இல்லை. ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொழில்துறையை முன்னேற்றுவதற்குத் தேவையான முதலீடுகளை ஊக்கப்படுத்தவும், உள் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு முன் வந்துள்ளது. இந்தியாவில் வேளாண் துறையில் கவனம் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியாவின் பொருளாதார நிலை முன்னேற்றத்தை சந்திக்கும் என்றார்.

நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 0.1சதவீதம் அளவில் இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாட்டை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இருளில் தள்ளிவிட்டது என்கிறது பாரதிய ஜனதா கட்சி.

English summary
Expressing disappointment over dismal 0.1 per cent industrial growth rate in April, finance minister Pranab Mukherjee on Tuesday said the government would take steps to give positive signals to the industry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X