For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாவல் பழத்திற்கு கிராக்கி: விலை கடும் உயர்வு

Google Oneindia Tamil News

நெல்லை: உற்பத்தி குறைந்ததால் மருத்துவ குணம் மிக்க நாவல் பழம் கிலோ ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

பழங்களில் அதிக மருத்துவ குணம் கொண்டது நாவல் பழம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது பரிந்துரை செய்யப்படுகின்றது. புராண காலம் முதல் சுட்ட பழம் என புகழ் பெற்ற நாவல் பழஙகள் ஜூன், ஜூலை மாதங்களில் அதிக அளவில் உற்பத்தியாகி விற்பனைக்கு வரும். தற்போது போதிய விளைச்சல் இல்லாததால் சீசன் தொடங்கியும் குறைந்த அளவிலான நாவல் பழங்கள் தான் விற்பனைக்கு வருகின்றன.

பெங்களூரில் இருந்து நெல்லைக்கு நாவல் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. முதல் ரக நாவல் பழம் கிலோ ரூ.240க்கும், அடுத்த ரக பழம் கிலோ ரூ.160க்கும் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.200க்கு விற்கப்பட்ட முதல் ரக நாவல் பழம் தற்போது ரூ.40 வரை அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் உற்பத்தி குறைவால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

English summary
Naval fruit price has soared because of the decrease in production. A kg fruit costs Rs.240.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X