For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் 104.72 டிகிரி வெயில், மீனம்பாக்கத்தில் 104.17 டிகிரி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் நேற்று 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

அக்னி நட்சத்திரம் முடிந்தும் தமிழகத்தின் பல இடங்களில் இன்னும் வெயிலின் ஆக்ரோஷம் குறையாமலேயே உள்ளது. தற்போது வெப்பத்தில் சென்னை வேலூரை முந்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னைக்குப் போட்டியாக மதுரையும் வருகிறது.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் வெயின் அளவு

மதுரை - 104.72 டிகிரி ஃபாரன்ஹீட்

மீனம்பாக்கம் - 104.17 டிகிரி

புதுச்சேரி - 102

நாகப்பட்டினம் - 102

சென்னை நுங்கம்பாக்கம் - 101.83

காரைக்கால் -101

பாளையம்கோட்டை -101 டிகிரி

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

கடந்த 24 மணிநேரத்தில் தோவாலாவில் 2 செ.மீ. மழையும், கன்னியாகுமரி, கூடலூர், திருப்புவனத்தில் தலா 1 செ.மீ. மழையும் பெய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யக்கூடும். ஆனால் சென்னையில் வெயிலின் அளவு 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டியே இருக்கும் என்றார்.

English summary
Madurai's heat has touched 104.72°F while Meenambakkam recorded 104.17°F. The heat in Chennai will remain close to 104°F.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X