For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெரினா பீச் லைட் ஹவுஸ் அருகே சிக்கிய ராக்கெட் லாஞ்சர்: பரபரப்பு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸ் அருகே ராக்கெட் லாஞர் கருவியின் ஒரு பகுதி கிடைத்துள்ளது.

உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது கடற்கரையான மெரினாவில் உள்ள லைட் ஹவுஸ் அருகே இரும்பால் செய்த ஏதோ வித்தியாசமான பொருள் கிடப்பதாக அங்குள்ள மக்கள் கடற்கரை போலீசாருக்கு நேற்று இரவு 7 மணி அளவில் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த உடனே மெரினா போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியான மர்ம பொருளை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அந்த பொருள் முக்கால் அடி நீளத்தில், 3 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அதன் முனைப்பகுதி கூம்பு போன்று இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வந்து அந்த பொருளை எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் அது ராக்கெட் லாஞ்சரின் ஒரு பகுதி என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அது 5 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அது 5 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பட்டிருந்தாலும் மெரினா கடற்கரையில் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Part of a rocket launcher was found near light house on the Marina Beach on monday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X