For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரிக்கு ரூ.300 கோடியில் கடற்கரை சாலை

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி-திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு ரூ.300கோடியில் கடற்கரை சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக சிப்காட் வளாகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ஓட்டபிடாரம் பகுதியில் சிப்காட் அமைக்க 1500

ஏக்கர் நிலம் இருக்கும் பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு வழியின்றி தரிசாக கிடக்கும் நிலப்பகுதி இத்திட்டத்திற்கு தேர்வு

செய்யப்படும். தூத்துக்குடியை மற்ற நகரங்களுககு இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலைகள், நான்குவழி துறைமுகம், விமான நிலையம் போன்ற

வசதிகள் உள்ளதால் தொழில் நகரமான தூத்துக்குடியை மேம்படுத்த புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்பட உள்ளது.

தூத்தக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. தூத்துக்குடி-

திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு ரூ.300 கோடியில் கடற்கரை சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

English summary
Tuticorin collector Ashish Kumar announced that beach road will be laid from Tuticorin to Kanyakumari via Tiruchendur at a cost of Rs. 300 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X