For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரேந்திர மோடிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தள்ளுபடி செய்தது குஜராத் ஹைகோர்ட்

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநில அமைச்சர் சோலங்கி மீதான ஊழல் வழக்கு தொடர்வதில் நீதிமன்ற உத்தரவை முதலமைச்சர் நரேந்திர மோடி பின்பற்றவில்லை என்று தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது/

மாநில அமைச்சர் புர்ஷோத்தம் சோலங்கி மீது ஊழல் வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சோலங்கி மீது வழக்கு தொடர்வது குறித்து தீர்மானிக்கும் முன்பு ஆளுநரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று நரேந்திர மோடிக்கும் அவரது அமைச்சரவைக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அமைச்சர் மீது வழக்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று ஆளுநரை கலந்தாலோசிக்காமல் அமைச்சரவை முடிவெடுத்தது. இதுதான் நீதிமன்ற அவமதிப்பு என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் அமைச்சரவை எடுத்த முடிவை ஆளுநருக்கு அனுப்புமாறும், அதன்பின்னர் அதை ஏற்பதா வேண்டாமா என்று ஆளுநர் முடிவு செய்வார் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

English summary
Narendra Modi will not be charged with contempt of court for refusing to sanction the prosecution of one of his ministers in Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X