For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டை பஸ்... பலமுறை பெற்றோர்கள் புகார் கூறியும் கண்டு கொள்ளாத ஜியோன் பள்ளி!

Google Oneindia Tamil News

Zion school Bus
சென்னை: ஸ்ருதியின் உயிரைப் பறித்த பேருந்தில் ஓட்டை இருப்பது குறித்தும், பேருந்து தகுதியில்லாத நிலையில் இருப்பது குறித்தும் ஏற்கனவே பலமுறை பெற்றோர்கள் தரப்பில் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியதாகவும், ஆனால் அதை ஜியோன் பள்ளி நிர்வாகம் பொருட்படுத்தவில்லை என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஸ்ருதி ஏற்கனவே ஒருமுறை இதே ஓட்டையில் விழப் பார்த்து உயிர் பிழைத்த செய்தியும் கிடைத்துள்ளது.

2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியான விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில்தான் பல தவறுகள் இருப்பதாக பெற்றோர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ருதியைப் பலி வாங்கிய பேருந்து ஓட்டை உடைசலாக இருப்பது குறித்து ஏற்கனவே பலமுறை பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் இது தனியார் பேருந்து, எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், சில நாட்களுக்கு முன்பு இதே பேருந்தின் ஓட்டையில் ஸ்ருதி விழப் பார்த்தாளாம். அப்போது அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளாள். ஆனால் நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தில் அவளது உயிர் அநியாயமாக பறி போய் விட்டது.

மேலும் பள்ளிப் பேருந்தில் பயணித்து வந்த ஸ்ருதி, விபத்தை சந்திக்கும் முன்பு தன்னை அழைத்துப் போக வந்திருந்த தனது தாயாரைப் பார்த்து கை காட்டியபடி பேருந்தில் தனது சீட்டிலிருந்து எழுந்திருக்கிறாள். அடுத்த சில விநாடிகளில்தான் அவள் ஓட்டையில் விழுந்து உயிரிழந்த சோகச் செய்தியும் கிடைத்துள்ளது.

ஸ்ருதியின் தாயார் பிரியா இன்னும் தனது அழகு மகளை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அழுதபடி காணப்படுகிறார். அவரது மூத்த மகன் பிரணவ், தனது தங்கை மறைந்த விவரம் கூட தெரியாமல் சைக்கிள் ஓட்டியபடி விளையாடிக் கொண்டிருக்கிறான்.

English summary
Though several representations were made to the Zion school management about the holes on the floor of the ill-fated bus, the authorities concerned simply washed their hands off the issue, saying that the bus was hired on contract, claim parents. Shruthi almost fell through the same hole on the bus a few days ago, her neighbours allege. Wednesday’s incident was hence, a cruel irony, they said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X