For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தை பிறப்பை அதிகரித்த 'பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே'?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Has Fifty Shades of Grey sparked a baby boom
மம்மி போர்ன் என்ற பெயரில் இங்கிலாந்து முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது ஜேம்ஸின் 50 ஷேட்ஸ் ஆப் கிரே நூல். இந்த நூலை படித்தபின்னர் இங்கிலாந்தில் குழந்தை பெற்றுக் கொள்வேரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படு கிளர்ச்சியூட்டக் கூடிய வகையில் இந்த நூல் அமைந்துள்ளதால், ஏகப்பட்ட பெண்களின் கையில் இந்தப் புத்தகம்தான் இப்போது வேத நூல் போல மாறியுள்ளது. தாய்மை, குழந்தைப் பேறு பற்றி ஆலோசனை கூறும் பிரபல இணையதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் படித்த பெண்கள் இதைப்பற்றிய பேச்சாகவே இருக்கிறார்களாம். இதனைப் படித்த அம்மாக்கள் நன்றி கூறியுள்ளனர் என்று அந்த இணையதள எடிட்டர் லிண்டா முர்ரா, தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகம் பெண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டி அதிக வேகமாக செயல்பட வைக்கிறதாம். இதனால் ஏராளமான பெண்கள் இப்போது கர்பமடைந்துள்ளனராம். 50 ஷேட்ஸ் ஆப் க்ரே விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை 20 மில்லியன் புத்தகங்கள் வரை விற்றுத் தீர்ந்துள்ளதாம்.

இந்த புத்தகம் மிகப்பெரிய மறுமலர்ச்சியை! ஏற்படுத்தியுள்ளதாக கூறும் பெண்கள், நீண்டநாள்களாக தனக்கு கரு உருவாகவே இல்லை. இந்த புத்தகத்தை படித்து செயல்பட்டதனால் தான் இப்போது கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர் இதனால் பலனைடைந்தவர்கள்.

அதேபோல் இந்த புத்தகத்தை படித்து தனது மனைவியின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டதாக கணவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அவளின் செயல்பாடுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. அதனை நான் உற்சாகமாக அனுபவிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

மம்மி போர்ன் புத்தகம் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறதோ தெரியவில்லை.

நம்ம ஊரு பக்கம் யாராவது கூரியர் பண்ணி விடுங்கப்பா, புண்ணியமாப் போகும்....!

English summary
The meteoric rise of Fifty Shades of Grey is set to spark a new baby boom, according to pregnancy and parenting websites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X