For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயாஜி அஸ்ஸாம் விவகாரம் சினிமா விஷயமல்ல: ஷிண்டேவின் கருத்தால் ராஜ்யசபாவில் அமளி

By Siva
Google Oneindia Tamil News

Jaya Bachchan
டெல்லி: அஸ்ஸாம் விவகாரம் ஒன்று திரைப்பட விவகாரம் போன்றது அல்ல என்று ராஜ்யசபா உறுப்பினரும், நடிகையுமான ஜெயா பச்சனைப் பார்த்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் நேற்று துவங்கி நடந்து வருகிறது. இன்று ராஜ்யசபாவில் அஸ்ஸாம் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பேசினார். அப்போது எம்.பி.யும், நடிகையுமான ஜெயபா பச்சன் எழுந்து அவரது உரையில் குறுக்கிட்டு அவையில் உள்ளவர்கள் பலரின் கேள்விகளுக்கு நீங்கள் ஏன் பதில் அளிக்கவில்லை என்று கேட்டார்.

அதற்கு ஷிண்டே, அஸ்ஸாம் விவகாரம் ஒன்று திரைப்பட விஷயம் அல்ல. அதனால் ஒழுங்காக கவனிக்கவும் என்றார். இதைக் கேட்ட ஜெயா பச்சன் ஆத்திரம் அடைந்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். உள்துறை அமைச்சர் என்பதால் ஷி்ண்டே மதிப்புமிக்க அவை உறுப்பினர்களை உதாசினப்படுத்தக் கூடாது என்று எதிர்கட்சி தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்தார். அவையில் அமளி தொடர்ந்ததையடுத்து ஷிண்டே தனது கருத்தை வாபஸ் பெற்றதுடன் ஜெயா பச்சனிடம் மன்னிப்பு கேட்டார். பச்சன் குடும்பத்தாரை எனக்கு நன்கு தெரியும். அவர்கள் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். ஜெயா எனது சகோதரி என்றார் ஷிண்டே.

நேற்று லோக்சபாவில் அஸ்ஸாம் குறி்த்த விவாதத்தின்போது பாஜக மூத்த தலைவர் அத்வானி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது என்றார். இதைக் கேட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆத்திரம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The debate over Assam violence in the Parliament is taking different directions again and again. After Sonia Gandhi, now its Jaya Bachchan who fumed at some derogatory remark during the monsoon session in the House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X