For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணுக்குள் வளர்ந்திருந்த 2 பற்கள்.. ஆந்திர பெண்ணுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை

By Chakra
Google Oneindia Tamil News

Nagabhushanam
சென்னை: பெண்ணின் கண்ணில் வளர்ந்திருந்த புற்று நோய்க் கட்டிக்குள் முழு அளவில் வளர்ந்த 2 பற்களும் இருந்ததைக் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த நாகபூஷணம் என்ற 23 வயதுப் பெண்ணின் இடது கண்ணில் புற்றுநோய் கட்டி வளர்ந்திருந்தது. அதை நீக்குவதற்காக அவர் சென்னை அரசு கண் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

இந்த புற்று நோய்க் கட்டி காரணமாக அவரது இடது கண் பார்வையும் பறிபோயிருந்தது.

அவரது கண்ணை மருத்துவர்கள் சோதனையிட்டபோது புற்று நோய்க் கட்டிக்குள் இரு பற்களும் இருந்தது தெரியவந்தது. இது மிக மிக அரிய நோயாகும். Orbital tetratoma எனப்படும் இந்த பிரச்சனையை பல மருத்துவர்கள் படத்தில் கூட பார்த்தது இல்லை.

இந் நிலையில் சென்னை மருக்குவமனையில் அவரது புற்று நோய்க் கட்டி அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், அதில் வளர்ந்திருந்த இரு பற்களும் அவரது கண் நரம்புகளை முழுமையாக சேதப்படுத்திவிட்டதால், இந்தக் கண்ணில் மீண்டும் பார்வை சாத்தியமில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பிறவிலேயே சிறிய கட்டியாக அவரது கண்ணில் புற்று நோய் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நாளாக நாளாக அது வளர்ந்துள்ளது. மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நாகபூஷணத்தின் பெற்றோர் அதை கண்டுகொள்ளாமல் விட்டதால் கட்டி பெரிதாகி, மிக அரிதாக ஏற்படும் கட்டிக்குள் பல் முளைப்பதும் நடந்துள்ளது.

English summary
Woman has had two teeth removed… from her EYE. Doctors operating on a tumour in Nagabhushanam Siva’s left eye were stunned to find the two fully-formed teeth embedded inside. The 23-year-old said: “I was born with an abnormal left eye and it continued to swell over the years. “My family was too scared to send me to see a doctor and during the last few years it has grown much bigger. “I had blurred vision so eventually I consulted a doctor for help.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X