கூடங்குளம் முதலாவது அணு உலையில் நாளை மறுநாள் முதல் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எஸ்.எஸ்.பஜாஜ் கூறியுள்ளதாவது:
அணுசக்தி ஒழுங்குமுறை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையின் பேரில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் முதலாவது அணு உலையில் நாளை மறுநாள் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கும். 4.57 மீட்டர் நீளம் உடைய 163 எரிகோல்களிலும் எரிபொருள் நிரப்பப்படும். இப்பணிக்கு 2 வார காலம் தேவைப்படும்.
மேலும் எரிபொருள் நிரப்பும் பணியை பார்வையிட அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளும் கூடங்குளம் வருகை தர உள்ளனர். அனேகமாக இம்மாத உறுதியில் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என்றார் அவர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதால் கூடுதலாக 2 ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications