For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட வலியுறுத்தி மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா கடிதம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்துமாறுக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

2012-13ம் ஆண்டில் சாகுபடிக்காக தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிடப்படவேயில்லை. ஆனால் கர்நாடக மாநில விவசாயத்துக்காக மட்டும் அணை திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியில் போதிய நீர் வராததால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு இல்லாமல், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாமல் போய்விட்டது. இனி சம்பா சாகுபடியை மட்டுமே நம்பி தமிழக விவசாயிகள் உள்ளனர். எனவே, தமிழக விவசாயிகள் சம்பா சாகுபடியையாவைது மேற்கொள்ளும் வகையில் காவிரியில் இருந்து தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட பிரதமர் வலியுறுத்த வேண்டும். காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
Pressing her demand for convening the Cauvery River Authority meeting, Tamil Nadu Chief Minister J Jayalalithaa on Thursday asked Prime Minister Manmohan Singh to direct Karnataka to release water to the state to raise long term crop in the Cauvery delta areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X