For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரசுடன் இணையப் போவதில்லை- புதிய கட்சிதான் - நவ.19ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: எதியூரப்பா

By Mathi
Google Oneindia Tamil News

yeddyurappa
சிக்மகளூர்: காங்கிரஸ் உட்பட எந்த ஒரு கட்சியிலும் இணையப்போவதில்லை என்றும் புதிய கட்சி தொடங்குவது பற்றி நவம்பர் 19-ந் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் முன்னாள் முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.

சிக்மகளூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாஜக நிர்வாகிகளை சந்தித்து வரும் எதியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய கட்சி தொடங்குவதில் நான் உறுதியாக இருக்கிறேன். நவம்பர் மாதம் 19-ந் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறேன். காவிரி நதிநீர் விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டு மாநிலத்தில் அமைதி உருவாக வேண்டும்.

கட்சி தொடங்குவதற்கு முன்பாக நவம்பர் 16-ந் தேதியன்று தாவணகெரேவில் மாநாடு நடத்த ஆலோசனை நடத்தி வருகிறேன். என்னைப் பொறுத்தவரையில் எந்த கட்சியுடனும் இணையமாட்டேன். யாரோடும் கை கோர்க்க மாட்டேன். பாரதிய ஜனதா கட்சியின் மேலிடத் தலைவர்களை சந்திப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றார் அவர்.

English summary
Smarting since his removal from the chief minister’s post, BJP strongman in Karnataka BS Yeddyurappa has announced that he will leave the party and will form his own party after touring the state till December. “I am not going to join any national outfit. I may build a new party. I will announce my decision after touring parts of the state, probably in December”, he told reporters in Chikmagalur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X